/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு போக்சோ
/
சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு போக்சோ
ADDED : செப் 29, 2024 02:49 AM
வேலுார்:வேலுார் மாவட்டம், சாரங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோழிப்பண்ணை தொழிலாளி ரஜினி, 40.
நேற்று முன்தினம் மாலை உடல்நலம் சரியில்லாத, 13 வயது சிறுமி மற்றும் அவரது தம்பி ஆகியோர், பேரணாம்பட்டிலுள்ள மருத்துவமனை செல்ல, மிட்டப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை, பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்கு காத்திருந்தனர்.
அவ்வழியாக சென்ற ரஜினி, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகக் கூறி, தன் பைக்கில் ஏற்றி மருத்துவமனைக்கு சென்றார்.
சிகிச்சைக்குப் பின், வீடு திரும்ப இரவானதால் வழியில், சிறுமியிடம் நைசாகப் பேசி அவரை மட்டும் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின், இருவரையும் சிறுமியின் வீட்டின் அருகே இறக்கி விட்டுச் சென்றார். இதையறிந்த அப்பகுதி மக்கள், ரஜினியைப் பிடித்து, தர்ம அடி கொடுத்து பேரணாம்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.