/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் மூன்று வாலிபர்களுக்கு 'போக்சோ'
/
பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் மூன்று வாலிபர்களுக்கு 'போக்சோ'
பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் மூன்று வாலிபர்களுக்கு 'போக்சோ'
பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் மூன்று வாலிபர்களுக்கு 'போக்சோ'
ADDED : நவ 21, 2024 01:47 AM
வேலுார்:வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 14 வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த, 16ம் தேதி இரவு, இயற்கை உபாதை கழிக்க, வீட்டிற்கு அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றார். அங்கு, அதே பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன், 28, இளமதன், 28, சின்ராஜ், 30, ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
மாணவி தனியாக இருப்பதை அறிந்த மூவரும், மாணவியின் வாயைப்பொத்தி, அப்பகுதியிலுள்ள கல்குவாரிக்கு துாக்கிச் சென்று, கூட்டு பலாத்காரம் செய்தனர்.
நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், தந்தை தேடிச்சென்றார். அப்போது அங்குள்ள கல்குவாரி அருகே மாணவியின் அலறல் சத்தம் கேட்டு சென்றபோது, அங்கிருந்த மூவரும் தப்பினர்.
மாணவியின் தந்தை, பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தபோது, சம்பவ இடம் வேப்பங்குப்பம் எல்லை எனக்கூறி அனுப்பினர். வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தபோது, பள்ளிகொண்டா எல்லை எனக் கூறி புகாரை வாங்க மறுத்தனர்.
ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள், பள்ளிகொண்டா போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து, ஆந்திர மாநிலம் சித்துாரில் பதுங்கியிருந்த இளமதன், வீரப்பன், சின்ராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து, வேலுார் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
மகளிர் போலீசார், மூன்று பேரையும் போக்சோவில் கைது செய்தனர்.

