/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசில் புகார்
/
கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசில் புகார்
கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசில் புகார்
கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசில் புகார்
ADDED : அக் 27, 2025 11:55 PM
வேலுார்: கருவை கலைக்க கூறி பெண்ணை தாக்கிய கணவர், அதற்கு உடந்தையாக இருந்த மைத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலுார் எஸ்.பி,. அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
வேலுார் மாவட்டம், வசந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
வேலுார் அடுத்த பாகாயத்தைச் சேர்ந்த அருணாச்சலத்தை காதல் திருமணம் செய்து கொண்டேன். தற்போது, ஏழு மாதம் கர்ப்பமாக உள்ளேன். கருவை கலைக்க சொல்லி, மைத்துனர், கணவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதனால், கணவர் கருவை கலைக்குமாறு கூறினார். நான் மறுப்பு தெரிவித்ததால் கர்ப்பிணி என்றும் பாராமல், கணவர் என்னை சரமாரியாக தாக்கினார். இது சம்பந்தமாக, வேலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன். அவர்கள், நடவடிக்கை எடுக்கவில்லை. என் கணவர், மைத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

