/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ரயிலில் பெண் பயணியை காப்பாற்றிய போலீஸ்காரர்
/
ரயிலில் பெண் பயணியை காப்பாற்றிய போலீஸ்காரர்
ADDED : அக் 23, 2025 02:08 AM
வேலுார், வேலுார் விருதம்பட்டை சேர்ந்தவர் அனிதா, 28; சென்னையில் உறவினர் வீட்டிற்கு செல்ல, நேற்று முன்தினம் மாலை, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். தீபாவளி முடிந்த நிலையில், ஊருக்கு செல்ல பயணிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அப்போது டபுள் டக்கர் விரைவு ரயில் வந்தது.
பயணிகள் முண்டியடித்து ஏறிய நிலையில், அனிதா உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டு கம்பியை பிடித்தபடி நிற்க ரயிலும் புறப்பட்டது. ஒரு கட்டத்தில் படியில் இருந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டு சாய்ந்தார். இதை கவனித்து அதிர்ச்சியடைந்து ஓடிய ரயில்வே போலீஸ்காரர் பத்மராஜா, அனிதா வெளியில் விழாமல் தாங்கி பிடித்தார். அதேசமயம் பயணிகளும் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க ரயிலும் நின்று விட்டது. அனிதாவை காப்பாற்றி போலீஸ்காரரை, பயணிகள் பாராட்டினர்.