/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பெண் குழந்தை கடத்தலில் 66 பேரிடம் விசாரணை
/
பெண் குழந்தை கடத்தலில் 66 பேரிடம் விசாரணை
ADDED : அக் 23, 2025 02:09 AM
ஈரோடு, சஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் வசிக்கும், ஆந்திர மாநில தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை, கடந்த, 1௬ம் தேதி அதிகாலை கடத்தி செல்லப்பட்டது. சித்தோடு போலீசார் ஆறு தனிப்படை அமைத்து விசாரிக்கும் நிலையில், இதுவரை சிறு தடயம் கூட கிடைக்காமல் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தங்கவேல் கூறியதாவது:
பொதுவாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வளர்ப்பதற்காக கடத்துகின்றனர்.
குழந்தையை கடத்துபவர்கள், பெற்றோரே பணத்துக்காக விற்பது, இடைத்தரகர்கள் என மூன்று ரகங்களாக இவர்கள் உள்ளனர். சித்தோடு குழந்தை கடத்தலில், தமிழக அளவில் குழந்தை கடத்தலில் ஈடுபடும், 66 குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம். குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக மூன்று கார்களை சந்தேகித்து விசாரிக்கிறோம். மாயமான குழந்தையின் குடும்பத்தில் பிரச்னை ஏதும் இல்லை. விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்து விடுவோம்.
இவ்வாறு கூறினார்.