/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
அரசு விழாவில் கூட்டுறவு அதிகாரியை வறுத்தெடுத்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,
/
அரசு விழாவில் கூட்டுறவு அதிகாரியை வறுத்தெடுத்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,
அரசு விழாவில் கூட்டுறவு அதிகாரியை வறுத்தெடுத்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,
அரசு விழாவில் கூட்டுறவு அதிகாரியை வறுத்தெடுத்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,
ADDED : நவ 15, 2025 01:31 AM

காட்பாடி: கூட்டுறவு சங்க கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளதாக தெரிவித்த கூட்டுறவு துறை அதிகாரியை, 'கட்டடம் கட்ட இடமே தேர்வு செய்யப்படாத நிலையில் அடிக்கல் நாட்டுவீங்களா?' என, மேடையிலேயே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., அவரை வறுத்தெடுத்தார்.
அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, வேலுார் மாவட்டத்தில், 2,757 பயனாளிகளுக்கு, 20.69 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காட்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை வகித்து பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை, 'அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை பகுதியில் கூட்டுறவு சங்க கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட உள்ளது' என, தெரிவித்தார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அணைக்கட்டு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார், அவரை மேடையில் அனைவரின் முன்னிலையிலும் திட்டி தீர்த்தார்.
எம்.எல்.ஏ., நந்தகுமார் பேசியதாவது:
கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை, தவறான தகவலை இங்கு தெரிவித்தார்.
அணைக்கட்டு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை பகுதியில், கூட்டுறவு சங்கம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது என்றார்.
பீஞ்சமந்தையில் கூட்டுறவு சங்க கட்டடம் அமைக்க இடமே இன்னும் தேர்வு செய்யவில்லை. 66 மலை கிராமங்கள் கொண்ட பீஞ்சமந்தையில், கூட்டுறவு சங்க கட்டட பணிகளை விரைந்து துவங்க வேண்டும். கூட்டுறவு துறை அதிகாரிகளின் அலட்சிய பணிகளை கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

