ADDED : அக் 28, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம்: வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த பாஸ்மர்பெண்டா அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் உதயகுமார், 53. பள்ளி மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக, கலெக்டர் சுப்புலெட்சுமிக்கு புகார் சென்றது.
அதன்படி, குடியாத்தம் ஆர்.டி.ஓ., சுபலட்சுமி, தாசில்தார் வடிவேல் ஆகியோர், பள்ளி மாணவ - மாணவியர் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.
அதில், உதயகுமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதுகுறித்த அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பித்தனர். தொடர்ந்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர்.
போக்சோவில் போலீசார், உதயகுமாரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.