/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
டூ - வீலரிலிருந்து வெளியே வந்த பாம்பு
/
டூ - வீலரிலிருந்து வெளியே வந்த பாம்பு
ADDED : டிச 27, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஆனந்தகிரியை சேர்ந்தவர் பிரதீப், 30, சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கிறார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக நேற்று சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், தன் ராயல் என்பீல்ட் புல்லட் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு, குடியாத்தம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் போட சென்றார்.
அப்போது, அந்த வாகனத்தின் முன்பக்கத்திலிருந்து, திடீரென ஒரு பாம்பு எட்டி பார்த்தது. இதை பார்த்த பிரதீப், புல்லட்டை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். குடியாத்தம் தீயணைப்பு துறையினர், பதுங்கியிருந்த 5 அடி நீள பாம்பை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

