ADDED : ஜூலை 26, 2025 08:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம் : கஞ்சா விற்ற கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் சுற்று வட்டார பகுதிகளில், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக, குடியாத்தம் கலால் போலீசாருக்கு புகார் சென்றது.
நேற்று குடியாத்தம் பைபாஸ் சாலையில், கல்லேரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, குடியாத்தம் அடுத்த செண்டத்துார் கிராமத்தை சேர்ந்த நிதிஷ்குமார், 22, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், சென்னையில் உள்ள ஒரு கல்லுாரியில் இறுதியாண்டு படிப்பதும், ஆந்திராவிலிருந்து கஞ்சா கொள்முதல் செய்து, மொபைல்போனில் இளைஞர்களை தொடர்பு கொண்டு, கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
நிதிஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.