ADDED : ஏப் 20, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒடுகத்துார்: வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அருகே கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத், 22; திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.
பாலிடெக்னிக்கில் மூன்றாமாண்டு படிக்கும், 17 வயது மாணவியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, மார்ச் 27ல், கடத்தி சென்று திருமணம் செய்தார். மாணவியின் பெற்றோர் புகாரின்படி, வேப்பங்குப்பம் போலீசார், பிரசாத் நண்பர்களான சூரியா, 26, விஜய், 22, ஆகியோரை பிடித்து விசாரித்ததில், கே.வி.குப்பம் வனப்பகுதி குகையில், பிரசாத்துடன் தங்கியிருந்த மாணவியை மீட்டனர்.
பிரசாத், சூரியா, விஜய் ஆகியோரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

