/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ரேடியோவில் திடீர் மின்கசிவு செருப்பு கிடங்கு எரிந்து நாசம்
/
ரேடியோவில் திடீர் மின்கசிவு செருப்பு கிடங்கு எரிந்து நாசம்
ரேடியோவில் திடீர் மின்கசிவு செருப்பு கிடங்கு எரிந்து நாசம்
ரேடியோவில் திடீர் மின்கசிவு செருப்பு கிடங்கு எரிந்து நாசம்
ADDED : ஏப் 23, 2025 02:38 AM
வேலுார்:வேலுாரில், ரேடியோவில் ஏற்பட்ட மின்கசிவால் செருப்பு கிடங்கு தீப்பற்றி எரிந்தது.
வேலுார், சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் முகுந்தன், 45; இவருக்கு சொந்தமான, ஈரடுக்கு மாடி வீட்டை, செருப்பு தைக்க மற்றும் அவற்றை வைக்கும் கிடங்காக பயன்படுத்தினார்.
நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மின்தடையால், கிடங்கை பூட்டிச் சென்றார். அப்போது, எப்.எம்., ரேடியோவை 'ஆப்' செய்ய மறந்து விட்டார்.
மீண்டும் மின்சாரம் வந்த நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு எப்.எம்., ரேடியோவில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
வேலுார் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும், தையல் அறை மற்றும் கிடங்கில் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செருப்புகள், மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகின.
வேலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.