/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
என்.ஐ.ஏ., அதிகாரிகள் போல் பேசி முதியவரிடம் ரூ.29.40 லட்சம் 'லபக்'
/
என்.ஐ.ஏ., அதிகாரிகள் போல் பேசி முதியவரிடம் ரூ.29.40 லட்சம் 'லபக்'
என்.ஐ.ஏ., அதிகாரிகள் போல் பேசி முதியவரிடம் ரூ.29.40 லட்சம் 'லபக்'
என்.ஐ.ஏ., அதிகாரிகள் போல் பேசி முதியவரிடம் ரூ.29.40 லட்சம் 'லபக்'
ADDED : டிச 26, 2025 02:40 AM
வேலுார்: முதியவரிடம், 29.40 லட்சம் ரூபாயை மோசடி செய்த போலி என்.ஐ.ஏ., அதிகாரிகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலுார் மாவட்டம், திருவலத்தை சேர்ந்தவர், 63 வயது முதியவர். இவர், தனியார் நிறுவனத்தில் கிளர்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
டிச., 10ம் தேதி, இவரை மொபைல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தாங்கள், டில்லி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எனவும், டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆதாரத்தில், முதியவரின் ஆதார் மற்றும் மொபைல்போன் எண்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 'உங்களை டிஜிட்டல் கைது செய்யாமலிருக்க, வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள்; அதன் உண்மை தன்மையை சரிபார்த்துவிட்டு மீண்டும் அனுப்புகிறோம்' என, தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய முதியவர், டிச., 18ம் தேதி வரை, 29 லட்சத்து 40,000 ரூபாயை அனுப்பியுள்ளார்.
பின்னர், போனில் பேசிய மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முடியாததால், முதியவர், வேலுார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.