/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் உயிரிழப்பு
/
துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் உயிரிழப்பு
ADDED : டிச 06, 2025 02:06 AM
கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் உயிரிழந்தார்.
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த தேவரிஷி குப்பத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி ராமு, 55; கூலி தொழிலாளி. இவர், நவ., 25 இரவு, வீட்டின் பின்புறம் உள்ள நிலத்திற்கு சென்றார்.
அப்போது, திடீரென நாட்டு துப்பாக்கி குண்டு ராமுவின் வயிற்றில் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாகியும், ராமு வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர், வீட்டின் பின்புறம் சென்று பார்த்தனர்.
அப்போது, ராமு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், ராமு உயிரிழந்தார்.
கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து, ராமுவை யாராவது நாட்டு துப்பாக்கியால் சுட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக துப்பாக்கியை பயன்படுத்திய போது குண்டு பாய்ந்ததா என, விசாரிக்கின்றனர்.

