/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு அரசு உதவி கிடைக்காத அவலம்
/
மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு அரசு உதவி கிடைக்காத அவலம்
மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு அரசு உதவி கிடைக்காத அவலம்
மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு அரசு உதவி கிடைக்காத அவலம்
ADDED : நவ 27, 2025 01:50 AM
வேலுார்: 'ஆந்திர மாநிலத்தில், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இருளர் பழங்குடியினருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவிகள் செய்யப்படவில்லை' என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சிலர், ஆந்திர மாநிலத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், வேலுார் கலெக்டரிடம் அண்மையில் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து, ஆந்திர மாநிலம் , சித்துார் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் ஆய்வு நடத்தி, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை அந்த தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம், முழு மருத்துவ பரிசோதனை ஆகியவை செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வேலுார் கலெக்டரிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, 'ஆந்திரா செங்கல் சூளைகளில் இன்னும் ஏராளமான தமிழர்கள் கொத்தடிமைகளாக உள்ளனர்' என்றனர்.

