/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்
/
தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்
தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்
தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்
ADDED : ஜன 31, 2024 01:14 AM
அணைக்கட்டு:வேலுார் அருகே, பள்ளி தலைமை ஆசிரியையை மாற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே கோவிந்ரெட்டிபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி. இவருடன், 13 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தலைமை ஆசிரியை ரேவதியின் தொந்தரவால் ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பில் செல்வதோடு, இடமாறுதல் வாங்கியும் சென்று விடுகின்றனர்.
இதனால், அப்பள்ளியில், படிக்கும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிப்பதை அறிந்த பெற்றோர், தலைமை ஆசிரியையை மாற்ற வலியுறுத்தி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர்.
ஆனால், பலன் இல்லை. கடந்த 26ல் நடந்த கிராம சபா கூட்டத்தில், தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினர். அப்போதும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், ஊராட்சித் தலைவி கவிதா தலைமையில், பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
அரியூர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து, கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.