/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
75 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது
/
75 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது
ADDED : ஜன 01, 2026 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம்: ஒடிஷா மாநிலத்திலிருந்து, லாரியில், 75 கிலோ கஞ்சா கடத்திய இருவரை, பரதராமி போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே தமிழகம் - ஆந்திரா எல்லையில் உள்ள பரதராமி சோதனைச்சாவடியில், பரதராமி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த சரக்கு லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர். அதில், 75 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
அதை ஒடிஷா மாநிலத்திலிருந்து லாரி மூலம், தமிழகத்திற்கு கடத்தி வந்த திருவண்ணாமலையை சேர்ந்த பிரகாஷ், 35, திருப்பத்துாரை சேர்ந்த வெங்கடேசன், 44, ஆகியோரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

