தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/வனப்பகுதியில் மான் கறி சமையல் இருவர் கைது

வனப்பகுதியில் மான் கறி சமையல் இருவர் கைது

வனப்பகுதியில் மான் கறி சமையல் இருவர் கைது


UPDATED : நவ 05, 2026 11:59 PM

ADDED : நவ 04, 2026 09:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:59 PM ADDED : நவ 04, 2026 09:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடியாத்தம்: குடியாத்தம் அருகே, வனப்பகுதியில் மானை வேட்டையாடி, அதன் கறியை விற்பனை செய்து சமைத்துக் கொண்டிருந்த இருவரை வனத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வீரசெட்டிபள்ளி காப்பு காட்டுப் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், குடியாத்தம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வீரசெட்டிபள்ளி காப்பு காட்டுக்குள் சுமார் 3 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் ஒன்றை மர்ம நபர்கள் வேட்டையாடி கொன்றுள்ளனர். பின், அதன் உடற்பாகங்களை வெட்டி, மான் கறியை சட்டவிரோதமாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய சோதனையில், வேட்டையாடப்பட்ட மானின் தலை மற்றும் கால்களை வைத்து சமையல் செய்து கொண்டிருந்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த குமார்,43, மற்றும் பாலாஜி,42, ஆகிய இருவரையும் வனத்துறையினர் கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் இருந்த மான் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட நாட்டு துப்பாக்கி, கத்தி, மான் தலை மற்றும் கால்கள் பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் பாலாஜி என்பவர் மீது ஏற்கனவே வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us