/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
இரு வேறு விபத்துகளில் 'ஏசி' மெக்கானிக் உள்பட இருவர் பலி
/
இரு வேறு விபத்துகளில் 'ஏசி' மெக்கானிக் உள்பட இருவர் பலி
இரு வேறு விபத்துகளில் 'ஏசி' மெக்கானிக் உள்பட இருவர் பலி
இரு வேறு விபத்துகளில் 'ஏசி' மெக்கானிக் உள்பட இருவர் பலி
ADDED : அக் 31, 2025 03:15 AM
வேலுார்:  வேலுார் மாவட்டத்தில் நடந்த இருவேறு விபத்தில் ஏ.சி., மெக்கானிக் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
வேலுார் மாவட்டம், அரியூர், அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் நரேஷ், 24; ஏ.சி., மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு வேலுார் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் உணவு வாங்க சென்றார்.
பின், அங்கிருந்து டூவீலரில் வீட்டை நோக்கி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் வந்த கார் மோதி நரேஷ் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே நரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலுார் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனைபோல வேலுார், அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் அருளப்பன்,61.
இவர் கடந்த 29ம் தேதி காட்பாடி - குடியாத்தம் சாலையில் டூ -- வீலரில் சென்று கொண்டிருந்தார். பேபி மருத்துவமனை அருகே சென்ற போது எதிரே வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

