/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் பலி
/
விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் பலி
ADDED : ஜன 25, 2026 07:03 AM
பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே, தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
வேலுார் மாவட்டம், பக்காலப்பல்லியில் அஷன் பாஷா என்பவருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. நேற்று காலை, வழக்கம் போல் பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக, இயந்திரத்தில் இருந்து விஷவாயு கசிந்துள்ளது. இதையடுத்து, பேரணாம்பட்டு ஷேக் அலி, 60, ஜமால் பாஷா, 41, ஆகிய இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தனர்.
அவர்களை, அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு, ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

