ADDED : ஜன 24, 2026 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடியை சேர்ந்தவர் பூவரசன்; விவசாயி. இவரது மனைவி ஐமாவதி. தம்பதியின் மகன் தங்க குருநாதன், 10. தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஐமாவதி பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.
பூவரசன், தன் மகனுடன், பெரும்பாடி, கொல்லிமேடு பகுதியில் வசித்தார். பூவரசன், மகனை அடிக்கடி அடித்து, கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ப ள்ளி செல்லாமல் வீட்டில் துாங்கிய சிறுவனுக்கு, கை, கால், தோள்பட்டையில் பூவரசன் சூடு வைத்துள்ளார். அலறி துடித்த சிறுவனை, தாத்தா நடராஜன் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குடியாத்தம் தாலுகா போலீசார் பூவரசனை கைது செய்தனர்.

