/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுார் கோட்டை அகழி இடிந்து சேதம்
/
வேலுார் கோட்டை அகழி இடிந்து சேதம்
ADDED : அக் 23, 2025 02:12 AM
வேலுார், வேலுார் கற்கோட்டையை சுற்றி, 3 கி.மீ.,க்கு, 20 முதல், 30 அடி ஆழம் வரை அகழி உள்ளது. அதில் அதிகளவு நீர் வந்தால் வெளியேற்றுவதற்காக, 33.20 கோடி ரூபாய் மதிப்பில் அகழி துார்வாரப்பட்டு, அதன் கரைச்சுவர்கள் கட்டப்பட்டன.
தற்போது தொடர் மழையால், அகழி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேற்கு பகுதியில், ரயில்வே ஸ்டேஷன் எதிரே, 10 மீ., நீளத்துக்கு கருங்கற்கள் நேற்று சரிந்து விழுந்தன. சென்னை வட்ட தொல்லியல் துறை உதவி பொறியாளர் ஈஸ்வரன், கோட்டை பராமரிப்பு அலுவலர் கோகுல்(பொ) ஆய்வு செய்தனர். மக்கள் செல்லாதபடி, எச்சரிக்கை பலகை, கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. 'தண்ணீர் அதிகம் உள்ளதால், மழைக்காலம் முடிந்த பின் சீரமைக்கப்படும்' என, அதிகாரிகள்
தெரிவித்தனர்.