ADDED : ஆக 21, 2011 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலூர்: வேலூரில் கேவிகுப்பம் உள்ளிட்ட ஆறு புதிய '108' ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா நடந்தது.
கலெக்டர் நாகராஜன் தலைமை வகித்தார்.
மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வில்வநாதன், வேலூர் நகர செயலாளர் வேதகிரி, சத்துவாச்சாரி நகர செயலாளர் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலூர் அரசு பெண்லன்ட் மருத்துவனையில் 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தை அமைச்சர் விஜய் துவக்கி வைத்தார்.

