/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'அண்ணாமலை கையையா பிடித்துள்ளோம்; அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும்'

ADDED : ஜன 16, 2024 12:42 PM
வேலுார்: ''அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் அவர் கையையா பிடித்துள்ளோம்,'' என்று, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.பொங்கலை முன்னிட்டு, வேலுார் மாவட்டம் காட்பாடியில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.க., தொண்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது: தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் சரி, இப்போதும் கூட தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தரக்கூடாது என்பதில் வைராக்கியமானவர். டிரிப்யூனல் அமைப்பதையும், அதை கெஜெட்டில் போடுவதையும் எதிர்த்தார். மோடியால் மட்டுமே காவிரி பிரச்னையை தீர்க்க முடியும் என அவர் கூறுகிறார். அப்படி கூறினால்தான் அவரது மகன், அரசியல் நடத்த முடியும் என்பதால் கூறுகிறார். அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் அவர் கையையா பிடித்துள்ளோம். நாளைக்கே தேர்தல் வந்தாலும் தி.மு.க., சந்திக்கும். தேர்தல் நேரத்தில் தான், கூட்டணியை அறிவிப்போம். இப்போது இருப்பவர்கள், எங்களுடன் இருப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.