ADDED : ஜூன் 24, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம், வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்து புதுப்பேட்டையை சேர்ந்தவர் தொழிலாளி இன்பரசன், 23. இவர், குடியாத்தம் டவுன் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த சில நாட்களுக்கு கடத்தி சென்றார்.
புகார் படி, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த இன்பரசனை போக்சோவில் கைது செய்து, சிறுமியை மீட்டனர்.