/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அரசு கொறடா மோகன் திடீர் சோதனை
/
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அரசு கொறடா மோகன் திடீர் சோதனை
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அரசு கொறடா மோகன் திடீர் சோதனை
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அரசு கொறடா மோகன் திடீர் சோதனை
ADDED : ஜூலை 13, 2011 01:12 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அரசு கொறடா திடீர் சோதனை
மேற்கொண்டார்.
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள்
இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இது பற்றி தகவ லறிந்த அரசு கொறடா
மோகன் எம்.எல்.ஏ., சங்கராபுரம் அரசு மருத்துவமனையை பார்வையிட்டார்.
மொத்தம் உள்ள 4 டாக்டர்களில் காலை, மாலை ஷிப்ட் முறையில் இரு டாக்டர்கள்
பணி புரிவதாக தெரிய வந்தது. ஒரு டாக்டர் விடுப்பில் சென்றுவிட்டதால், ஒரு
டாக்டர் மட்டுமே பணியில் இருந்தார். பல ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ள
பிரேத பரிசோதனை அறை, பயன்படுத்தப்படாமல் உள்ள அறுவை சிகிச்சை அறை மற்றும்
உபயோகப்படுத்தப்படாமல் உள்ள எக்ஸ்ரே மிஷின் ஆகியவற்றை எம்.எல். ஏ.,
பார்வையிட்டார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அரசு, ராஜசேகர், பேரவை
செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நாராயணன் , குசேலன், தே.மு.தி.க., நகர
தலைவர் சுதாகர் உடனிருந்தனர்.