sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பிரசவ இறப்புகளை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கை தேவை: கலெக்டர் அறிவுரை

/

பிரசவ இறப்புகளை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கை தேவை: கலெக்டர் அறிவுரை

பிரசவ இறப்புகளை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கை தேவை: கலெக்டர் அறிவுரை

பிரசவ இறப்புகளை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கை தேவை: கலெக்டர் அறிவுரை


ADDED : ஜூலை 14, 2011 12:04 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : பிரசவத்தின் போது ஏற்படும் இறப்புகளை தவிர்க்க மருத்துவர்களும், செவிலியர்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் மணிமேகலை பேசினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு மகப்பேறு இறப்புகள் குறித்து வாய்மொழி ஆராய்வு மற்றும் விசாரணை கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரஞ்சோதி முன்னிலை வகித்தார்.



கலெக்டர் மணிமேகலை பேசியதாவது: கடந்த 2010-2011 மற்றும் 2011-2012ல் ஜூன் வரை நடந்த பிரசவத்தின் போது விழுப்புரம் சுகாதார மாவட்டத்தில் 19 இறப்பும், கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டத்தில் 44 இறப்பும் நடந்துள்ளது. இந்த இறப்புகள் மகப்பேறின் போது ஏற்படும் உதிரப்போக்கு, இருதய öŒயல்பாடு குறைவு, வலிப்பு, மஞ்சள் காமாலை போன்றவற்றால் ஏற்படுகிறது. பிரசவ இறப்புகளை தவிர்க்க மருத்துவர்கள், செவிலியர்கள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் மக்களுக்கு தேவையான பிரசவ வழிமுறை மற்றும் ஆலோசனைகளை அந்தந்தப் பகுதியிலுள்ள டாக்டர் முறையாக அறிவிக்க வேண்டும். உதிரப்போக்கு ஏற்படும் போது, உடலில் ரத்த குறைபாட்டை போக்க தேவையான அளவு ரத்தம் மருத்துவமனைகளில் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.



சிக்கலான பிரசவங்களை அடையாளம் கண்டு அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளுக்கு கர்ப்பிணிகளை அனுப்பி வைக்க வேண்டும். அவசர காலத்தில் 108 ஆம்புலன்ஸ் வண்டியைப் பயன்படுத்திக் கொள்ள பொது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் மணிமேகலை பேசினார்.










      Dinamalar
      Follow us