sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கவரை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சாலை வசதியின்றி மாணவர்கள் அவதி

/

கவரை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சாலை வசதியின்றி மாணவர்கள் அவதி

கவரை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சாலை வசதியின்றி மாணவர்கள் அவதி

கவரை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சாலை வசதியின்றி மாணவர்கள் அவதி


ADDED : ஜூலை 14, 2011 12:12 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : கவரை ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலை பள்ளிக்கு சாலை வசதி இல்லாமல் மாணவர்கள் சகதியில் நடந்து அவதிப்படுகின்றனர்.

செஞ்சி தாலுகா கவரையில் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1500க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தனியார் நிலங்களுக்கு மத்தியில் இப்பள்ளியை கட்டி உள்ளனர். பள்ளிக்கூடம் கட்டியது முதல் இதற்கென வழிஇல்லை. செஞ்சி - விழுப்புரம் சாலையில் இருந்து வரும் பிரதான சாலையின் முடிவில் இருந்து பள்ளிக்கு மாணவர்கள் தனியார் நிலங்களின் வழியாகவே வந்து செல்கின்றனர்.



சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு எதிர்புறம் உருவான மனைப்பிரிவிற்கு சாலை ஒதுக்கினர். இந்த சாலை பள்ளி வரை சென்றதால் மாணவர்கள் செல்வதற்கு இது போதுமானதாக இருந்தது. தனியார் ஒதுக்கிய இந்த சாலையை இதுவரை அரசு கணக்கில் கொண்டு வந்து, தார் சாலையாக மாற்றாமல் வைத்துள்ளனர். இதனால் மழை பெய்யும் போது மண் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாகிறது. இந்த வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள் சகதியில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த வழியை தார் சாலையாக மாற்றி பள்ளி மாணவர்கள் சிரமமின்றி பள்ளி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.










      Dinamalar
      Follow us