sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருவெண்ணெய்நல்லூரில் சேர்மன் பதவியை குறி வைத்து "வியூகம்' :கட்சி நிர்வாகிகள் தீவிரம்

/

திருவெண்ணெய்நல்லூரில் சேர்மன் பதவியை குறி வைத்து "வியூகம்' :கட்சி நிர்வாகிகள் தீவிரம்

திருவெண்ணெய்நல்லூரில் சேர்மன் பதவியை குறி வைத்து "வியூகம்' :கட்சி நிர்வாகிகள் தீவிரம்

திருவெண்ணெய்நல்லூரில் சேர்மன் பதவியை குறி வைத்து "வியூகம்' :கட்சி நிர்வாகிகள் தீவிரம்


ADDED : அக் 06, 2011 01:08 AM

Google News

ADDED : அக் 06, 2011 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை கைப்பற்ற முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 22 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன. சேர்மன் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் 12 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே சேர்மன் பதவியை பிடிக்க முடியும். கடந்த 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., 11 கவுன்சிலர்களை பிடித்திருந்தும் கூட்டணிக்கட்சியான காங்., கட்சிக்கு ஆதரவு அளித்ததால் ஒரு 'சீட்' மட்டுமே பிடித்த காங்., சேர்மன் பதவியை தக்க வைத்தது. தி.மு.க., துணை சேர்மன் பதவியை பிடித்தது. அ.தி.மு.க., சார்பில் ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெறாததால் அக்கட்சியினர் பி.டி.ஓ., அலுவலகத்திற்குள் வர முடியவில்லை. தே.மு. தி.க., மூன்று இடங்களையும், ம.தி. மு.க., மூன்று இடங்களையும், பா.ம.க., இரு இடங்களிலும், கம்யூ., கட்சிகள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன. இதையே காரணமாக கொண்டு அ.தி.மு.க.,வினர் வரும் தேர்தலில் வெற்றி பெற்று சேர்மன் பதவியை பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு அச்சாரமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய மாவட்ட செயலாளர் மோகன் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது கட்சியினருக்கு எச்சரிக்கையும் விடுத்தார். இதனடிப்படையில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் மனைவி மகாலட்சுமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளா ளர் நாராயணன் மனைவி பவுனு, முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் மகள் சுமதி ஆகியோர் ஒன்றிய கவுன் சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். மறுபுறம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைராஜ் மனைவி நளினி, ஒன்றிய அவைத்தலைவர் விஸ்வநாதன் மனைவி வசந்தா மற்றும் தே.மு. தி.க., ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மனைவி புவனேஸ்வரி ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கட்சிகள் சேர்மன் பதவியை பிடிப்பதில் தீவிரம் காட்டுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us