/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்
/
காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்
ADDED : ஜூலை 13, 2011 01:07 AM
விழுப்புரம் : காதல் திருமணம் செய்த தம்பதியினர் விழுப்புரம் எஸ்.பி.,
அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி முறையிட்டனர்.
கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த
சண்முகம் மகன் சதீஷ்(21). இவர் புதுச்சேரி அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்
மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சென்னையைச் சேர்ந்த அண்ணாதுரை மகள்
விஜயகலா என்பவரை காதலித்து வந்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும்
கடந்த 7ம் தேதி புதுச்சேரியில் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களது
திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயகலாவின் பெற்றோர் மற்றும்
உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனையடுத்து நேற்று முன்தினம்
மாலை விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்த சதீஷ், விஜயகலா இருவரும்
பாதுகாப்பு கோரி மனு அளித்தனர்.