/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி
/
சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி
ADDED : ஜூலை 13, 2011 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : மயிலாடுதுறையைச் சேர்ந்த அஸ்ரப் மகன் ஜான்ரியாஸ்(18).
இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். கடந்த
9ம் தேதி இரவு ஜான்ரியாஸ் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறைக்கு சென்றார்.
கீழ்குப்பம் அடுத்த தாகம்தீர்த்தாபுரம் அருகே எதிரே வந்த மேல்நாரியப்பனூரை
சேர்ந்த முத்துசாமி மகன் ஹரி(33) என்பவர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்
சென்றார். அப்போது எதிர்பாராமல் இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில்
பலத்த காயமடைந்த ஜான்ரியாஸ் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப்
பதிந்து விசாரித்து வருகின்றனர்.