/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்திய அரசு பணி குறித்த கருத்தரங்கம்
/
இந்திய அரசு பணி குறித்த கருத்தரங்கம்
ADDED : ஜூலை 16, 2011 02:37 AM
விழுப்புரம்:இந்திய அரசு பணி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்தது.
கல்லூரி
முதல்வர் கஸ்தூரிபாய் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார்
முன்னிலை வகித்தார். இதில் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் சுஜாதா ரமேஷ்
மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., படிப்பில் சேருவதற்கான வழிமுறைகள்
குறித்து விளக்கினார்.தொடர்ந்து வணிக வரித்துறை துணை ஆணையர் ஜானகி
ஐ.ஏ.எஸ்., பயிற்சி மற்றும் தேர்வு எழுதும் முறைகள் பற்றியும், சென்னை
செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் மதுரம்
செல்வராஜா ஐ.பி.எஸ்., பயிற்சி மற்றும் தேர்வு எழுதும் முறைகள் குறித்தும்
விளக்கினர்.பின்னர் திறனறி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு
கலெக்டர் மணிமேகலை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து இந்திய அரசு
பணி தேர்விப் பங்கேற்கும் வழிமுறைகள் குறித்து டி.ஆர்.ஓ., வெங்கடாசலம்
பேசினார்.இந்நிகழ்ச்சியில் 20 கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை சேர்ந்த மாணவ,
மாணவிகள் கலந்து கொண்டனர்.