ADDED : ஜூலை 17, 2011 01:36 AM
செஞ்சி : செஞ்சி அருகே வட்டார வள மைய ஆசிரியை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கவுந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகள் அம்பிகா,28; பி.ஏ., பி.எட்., படித்தவர்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் மேல்மலையனூர் வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக பணிபுரிந்தார்.வளத்தியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்து திரும்பிய அம்பிகா, தனது உறவினர்களை சந்திக்க சென்றார். வளத்தியில் இருந்து 5 கி.மீ.,தொலைவில் உள்ள ஆர்காம் பூண்டி ஏரியில் உடைகள் களையப்பட்டு, குப்புற கவிழ்ந்த நிலையில் நேற்று காலை இறந்து கிடந்தார்.
கழுத்து, வயிற்றில் பல இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தி, தலையில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். உடல் அருகே ஒரு ஜட்டி, மொபைல் போன், பெண்கள் அணியும் செருப்பு இருந்தது. அவர் அணிந்திருந்த கம்மல், கால் கொலுசு அப்படியே இருந்தன.விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., பெருமாள், டி.எஸ்.பி., பன்னீர் செல்வம், இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேலு, மணவாளன் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மிஸ்டி ஒரு கி.மீ., தூரம் ஓடி நின்றது.ஆசிரியை அம்பிகாவை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்தனரா அல்லது நெருங்கி பழகிய நபருடன் உல்லாசமாக இருந்த போது ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.