/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேர்மன் வேட்பாளர் முற்றுகையால் பரபரப்பு
/
சேர்மன் வேட்பாளர் முற்றுகையால் பரபரப்பு
ADDED : அக் 06, 2011 01:09 AM
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிடும்
சுயேச்சை வேட்பாளர் நூர்முகமதுவை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம்
நகராட்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., வில் சீட் கிடைக்காமல் போனதால்
அதிருப்தியடைந்த முன்னாள் நகர செயலாளர் நூர்முகமது சுயேச்சையாக
களமிறங்கியுள்ளார். இவர் விழுப்புரம் மகாராஜபுரம், தாமரைக்குளம் பகுதியில்
தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை பிரசாரத்தை துவக்கினார். பொது மக்களிடம்
துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேகரித்தார். அப்போது தாமரைக்குளம்
பகுதியில் வடிகால் வசதி செய்யாததை கண்டித்து அப்பகுதி பெண்கள் வேட்பாளர்
நூர்முகமதுவை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியில் மழை காலங்களில் கழிவுநீர்
தேங்கி நிற்பதாகவும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென
வலியுறுத்தினர். தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்தால் அடிப்படை வசதிகள்
நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக நூர்முகமது உறுதியளித்தார். இதனால்
அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கல்லூரி சாலை,
கீழ்பெரும்பாக்கம், இந்திராநகர், காகுப்பம் பகுதிகளில் இவர்கள் ஓட்டு
சேகரித்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் பாலகுரு, அலாவுதின், அ.தி.மு.க.,
எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் பாலசுப்பிரமணியன், ராஜாரவி, ஞானசேகர்,
பரந்தாமன், சார்லஸ், தேவதாஸ், கவுஸ்பாஷா, ரஞ்சித்குமார், அபிராமன்
உள்ளிட்டோர் உடன் சென்றனர். இதற்கு முன்னதாக வந்த தி.மு.க., வேட்பா ளர்
சக்கரை மற்றும் சுயேச்சை வேட்பாளர்க ளிடம் இந்த பிரச்னையை தீர்க்க
வேண்டுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

