ADDED : ஜூலை 17, 2011 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : மின் கசிவு காரணமாக ஊராட்சி தலைவரின் வீடு தீப்பிடித்து எரிந்தது.திட்டக்குடி அடுத்த அருகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி.
ஊராட்சி தலைவர். இவரது வீட்டின் அருகே உள்ள மின்கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.