ADDED : அக் 07, 2011 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனூர் அருகே அரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஜனார்த்தனன் கடையில் பஜ்ஜி
சாப்பிட்டார். அப்போது அங்கு வந்த அதே பகுதி வடக்கு தெருவை சேர்ந்த சக்தி
என்பவர் வெங்கடேசனிடம் குடிக்க பணம் கேட்டார். வெங்கடேசன் பணம் தர
மறுத்தததால் ஆத்திரமடைந்த சக்தி அவரை திட்டி தாக்கி மிரட்டினார். வளவனூர்
போலீசார் வழக்குப் பதிந்து சக்தியை கைது செய்தனர்.

