/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வார்டு உறுப்பினர்கள் 26 பேர் தேர்வாகினர்
/
வார்டு உறுப்பினர்கள் 26 பேர் தேர்வாகினர்
ADDED : அக் 06, 2011 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் ஒன்றியத்தில் 26 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கராபுரம் ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் 1,290 பேர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதில் 26 வார்டுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

