ADDED : செப் 13, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மகாலட்சுமி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசுகையில் முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் மூலம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 60 வேப்பமரக் கன்றுகளும். ஆடு தொடா, நொச்சி உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் மயிலம் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்லாம் என தெரிவித்தார்.