/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வித்யோதயா மழலையர் பள்ளியில் நாளை 2ம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி
/
வித்யோதயா மழலையர் பள்ளியில் நாளை 2ம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி
வித்யோதயா மழலையர் பள்ளியில் நாளை 2ம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி
வித்யோதயா மழலையர் பள்ளியில் நாளை 2ம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி
ADDED : அக் 01, 2025 01:01 AM
விழுப்புரம் தனலட்சுமி கார்டன் ஸ்ரீ வித்யோதயா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில், நாளை 2ம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழுப்புரம் திருச்சி மெயின் ரோடு தனலட்சுமி கார்டனில், ஸ்ரீ வித்யோதயா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ப்ரீ கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, ஸ்டீம் முறை கல்வி, செயல்முறை கற்றல் முறையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது. மேலும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தின் ஒருங்கிணைப்பு ஸ்டீம் லேப் உள்ளது.
மேலும், முழு குளிர்சாதனம் இணைந்த மேம்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை, சுகாதாரம், சி.சி.டி.வி., கண்காணிப்பு கொண்ட சுத்தம் மற்றும் பாதுகாப்பான சூழல் அமைந்துள்ளது. பாதுகாப்பான பள்ளி பஸ் வதி உள்ளது.
மாணவர் முழு முன்னேற்றம், மனித நேய அணுகுமுறை, மாணவர் தனிப்பட்ட கவனம் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தப்படுகிறது. இப்பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது. நாளை 2ம் தேதி காலை 9:00 மணிக்கு பள்ளியில் நடக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து கலந்து கொள்ளலாம்.