/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எல்லோருக்கும் எல்லாம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வளர்ந்து வரும் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மஸ்தான் எம்.எல்.ஏ., பெருமிதம்
/
எல்லோருக்கும் எல்லாம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வளர்ந்து வரும் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மஸ்தான் எம்.எல்.ஏ., பெருமிதம்
எல்லோருக்கும் எல்லாம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வளர்ந்து வரும் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மஸ்தான் எம்.எல்.ஏ., பெருமிதம்
எல்லோருக்கும் எல்லாம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வளர்ந்து வரும் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மஸ்தான் எம்.எல்.ஏ., பெருமிதம்
ADDED : அக் 01, 2025 01:01 AM

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் இதுவரை காணாத வளர்ச்சியை பெற்று வருகிறது என மஸ்தான் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், மயிலம் சட்டசபை தொகுதிகள் விவசாயம் சார்ந்த பகுதி. படித்த இளைஞர்கள் வேலை இன்றி சென்னை, பெங்களூர் என ஊரை விட்டு செல்லும் நிலை இருந்தது. படித்த பெண்கள் வெளி இடங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருந்தது.
மக்களுக்காக ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் இந்த மாவட்டத்தின் நிலை அறிந்து திண்டிவனத்தில் சிப்காட் துவங்கி 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளனர். இதில் இளைஞர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பெண்களும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
திண்டிவனம் நகர வளர்ச்சிக்காக புதிய பஸ் நிலையம், வணிக வளாகம், தாலுகா அலுவலக கட்டம், பத்திரபதிவு அலுவலகம், அறிவு சார் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.
செஞ்சியில் 40 ஆண்டு கனவான அரசு கல்லுாரி கொண்ட வரப்பட்டு, இதற்காக 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஏழை மாணவர்கள் தொழில் கல்வி பயில அரசு தொழிற்கல்வி மையம் துவக்கபட்டுள்ளது.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சங்கராபரணி ஆற்றில் 7.70 கோடி ரூபாய் மதிப்பில் தட்டுபணை கட்டும் பணி நடந்து வருகிறது. 1.60 கோடி ரூபாய் மதிப்பில் அறிவுசார் மையம் கட்டும் பணி நடந்து வருகிறது.
செஞ்சி பி.ஏரியில் 1.90 கோடி ரூபாய் மதிப்பில் கரைகளை பலப்படுத்தி சீரமைக்கப்பட்டுள்ளது. தொண்டி ஆற்றில் அருகாவூர், அவியூரில் மேம்பாலம், வடபாலை, செவலபுரை, சிறுவாடி, ரெட்டிப்பாளையத்தில் வராகநதியில் மேம்பாலம் கட்டுப்பட்டுள்ளது. நொச்சலுார், தாயனுார் உள்ளிட்ட இடங்களிலும் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
திண்டிவனம் மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டம் கட்டும் பணி நடந்து வருகிறது. செஞ்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டம் கட்டப்பட்டு வருகிறது. கோணை கிராமத்தில் புதிய கட்டடம் கட்டி ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்ட புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 10 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
செஞ்சியில் 33 கோடி ரூபாய் மதிப்பில் அம்ரூத் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஏலக்கூடம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
மூன்று தொகுதிகளிலும் 3 ஆயிரத்திற்கு அதிகமானவர்களுக்கு கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவையான குடிநீர், சாலை வசதிகள், மருத்துவ வசதிகள் இதுவரை இல்லாத வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்று தொகுதிகளும் இதுவரை எந்த ஆட்சியிலும் எட்டாத அளவிற்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன.
இவ்வாறு மஸ்தான் எம்.எல்.ஏ., கூறினார்.