/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடிதம் எழுதி த.வெ.க., நிர்வாகி தற்கொலை
/
கடிதம் எழுதி த.வெ.க., நிர்வாகி தற்கொலை
ADDED : செப் 30, 2025 08:11 AM

செஞ்சி; கரூர் சம்பவம் குறித்து கடிதம் எழுதி வைத்து த.வெ.க., நிர்வாகி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், விற்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன், 50; த.வெ.க., கிளை செயலர். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
சென்னை, அம்பத்துார் அருகே அயப்பாக்கத்தில் மனைவி, குழந்தைகளுடன் வசித்தார். ஸ்டீல் கேட், கதவுகளுக்கு பாலீஷ் போடும் வேலை செய்து வந்தார். இரு நாட்களுக்கு முன், விற்பட்டு கிராமத்திற்கு அய்யப்பன் வந்தார். வீட்டில் அவரது தாய் முனியம்மாள் மட்டும் இருந்தார்.
நேற்று மாலை வீட்டில் அய்யப்பன் துண்டால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சட்டை பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருந்தது.
அதில், கரூர் த.வெ.க., கூட்ட நெரிசலுக்கு, தி.மு.க., முன்னாள் அமைச்சர் காரணம் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் எழுதி இருந்தார். போலீசார் அய்யப்பன் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.