/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம்
/
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2025 10:18 PM
விழுப்புரம்; ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊராட்சி செயலாளர்கள் விழுப்புரத்தில் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்தி அரசணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலத் துணைத் தலைவர் கவிச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நீலமேகம், மாநில இணை செயலாளர்கள் நேரு, ராமமுனியன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் ரங்கநாதன், மாநில செயற்குழு கணபதி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்டத்தை சேர்ந்த 688 ஊராட்சி செயலாளர்கள் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.