/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொதுத்தேர்வில் 106 பேர் சென்டம்: மவுண்ட் பார்க் பள்ளி சாதனை
/
பொதுத்தேர்வில் 106 பேர் சென்டம்: மவுண்ட் பார்க் பள்ளி சாதனை
பொதுத்தேர்வில் 106 பேர் சென்டம்: மவுண்ட் பார்க் பள்ளி சாதனை
பொதுத்தேர்வில் 106 பேர் சென்டம்: மவுண்ட் பார்க் பள்ளி சாதனை
ADDED : மே 12, 2024 04:37 AM

தியாகதுருகம்: மவுண்ட் பார்க் பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் முக்கிய பாடங்களில் சென்டம் எடுத்த 106 மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் இயற்பியல்-5, கணிதம்-7, கம்ப்யூட்டர் சயின்ஸ்-9 என மொத்தம் 21 பேர் சென்டம் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
அதே போல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதம்-60, அறிவியல்-19, சமூக அறிவியல்-6 என மொத்தம் 85 பேர் சென்டம் எடுத்து சாதித்துள்ளனர்.
அதிக சென்டம் எடுத்து மாவட்ட அளவில் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தாளாளர் மணிமாறன் கோப்பை வழங்கி பாராட்டினார்.
சீனியர் முதல்வர் கலைச்செல்வி, ஸ்பெஷல் அகாடமி பள்ளி முதல்வர் முத்துக்குமரன், துணை முதல்வர் வினோதினி, பொறுப்பாசிரியர் மணிகண்டன் உடனிருந்தனர்.