/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வங்கி பணியாளரிடம் ரூ.11.19 லட்சம் 'அபேஸ்'
/
வங்கி பணியாளரிடம் ரூ.11.19 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஆக 06, 2024 07:19 AM
விழுப்புரம் : திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் லட்சுமணன்,31; தனியார் வங்கி உதவியாளர். இவர், கடந்த ஜூன் 10ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரேடிங் தொடர்பாக வந்த லிங்க்கிற்குள் சென்றார்.
அப்போது மர்ம நபர் கூறியபடி, லட்சுமணன் தனது விபரங்களை பதிவு செய்து, தனக்கென யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு உருவாக்கினார். உடன் மர்ம நபர், லட்சுமணனை சில குரூப்களில் இணைத்து, பணத்தை அவர்கள் கூறும் ஸ்டாக்கில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது பற்றி கூறியுள்ளார்.
அதனை உண்மை என நம்பிய லட்சுமணன் பல தவணைகளில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.11.19 லட்சத்தை செலுத்தி ஏமாந்தார். இதுகுறித்து லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.