/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
13ம் தேதி கூட்டுறவு சங்க பணியாளர் நாள் நிகழ்ச்சி
/
13ம் தேதி கூட்டுறவு சங்க பணியாளர் நாள் நிகழ்ச்சி
ADDED : செப் 11, 2024 01:43 AM
விழுப்புரம் : விழுப்புரம் மண்டலத்தில் 13ம் தேதி கூட்டுறவு சங்க பணியாளர் நாள் நிகழ்ச்சி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் அலுவலக செய்திக்குறிப்பு:
இந்தாண்டு (2024-25) கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின்போது, கூட்டுறவுத் துறை அமைச்சரால் அறிவித்தபடி, விழுப்புரம் மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின், பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கான பணி தொடர்பாகவும். பணியின்போது அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிர்ந்திடவும், அக்குறைகளை விதிகளுக்குட்பட்டு தீர்வு செய்திடும் வகையில், இரண்டாவது பணியாளர் நாள் நிகழ்ச்சி வரும் 13ம் தேதி நடக்கிறது. காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் இணைப் பதிவாளர் பெரியசாமி தலைமையில் நடக்கிறது.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க பணியாளர்கள், பணி தொடர்பாகவும், பணியின்போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.