/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., கிளைச் செயலாளரிடம் ரூ.17 ஆயிரம் பறிமுதல்
/
பா.ம.க., கிளைச் செயலாளரிடம் ரூ.17 ஆயிரம் பறிமுதல்
ADDED : ஏப் 20, 2024 06:14 AM
செஞ்சி : பா.ம.க., கிளைச் செயலாளரிடம் இருந்து 17 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட செஞ்சி சட்டசபை தொகுதி, வளத்தி அடுத்த கஞ்சமலை புரவடையில் நேற்று காலை 7:00 மணியளவில் பா.ம.க.,வினர் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்வதாக வளத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது அங்கிருந்த பா.ம.க., கிளைச் செயலாளர் குபேந்திரனைப் பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 17 ஆயிரம் ரூபாய் இருந்தது.
இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து செஞ்சியில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதியிடம் ஒப்படைத்தனர்.

