இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ADDED : செப் 15, 2026 07:22 PM
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 2026–27 ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு இளநிலை வகுப்புகளுடன், இந்தாண்டு புதிதாக துவங்கப்பட்ட முதுநிலை பட்டப்படிப்பு, வகுப்புகளின் தொடக்க விழா, கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு, இ.எஸ்., கல்விக்குழும நிறுவனங்களின் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். கல்லுாரி துறை தலைவர் செல்வம் வரவேற்றார். முதல்வர் இந்திரா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை வெரிஜோன் டேட்டா சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன சசிரேகா சுப்பிரமணி, புதுச்சேரி எத்திக்கா நெக்ஸ் டேட்டா சொல்யூஷன்ஸ் நிறுவன முதன்மை அதிகாரி பாரதிதாசன், மேலாளர் குகன் ஆகியோர் பங்கேற்று முதலாம் ஆண்டு வகுப்புகளை துவக்கி வைத்து மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் உட்பட கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர் சேர்க்கை பொறுப்பாளர் சிவசக்தி நன்றி கூறினார்.
