ADDED : மே 07, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம், : மயிலத்தில் விற்பனை செய்வதற்காக 1,100 கிராம் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார், நேற்று மயிலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, முருகன் கோவில் அடிவாரத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், மயிலம், காமராஜர் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் செல்வம், 23; வானுார் அடுத்த நெமிலியைச் சேர்ந்த ஜலந்தர் மகன் ஜெனிஸ்கான், 19; என்பதும் தெரிந்தது.
மேலும் அவர்கள் வைத்திருந்த பையில் 1,100 கிராம் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.