/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: செஞ்சி அருகே பரிதாபம்
/
கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: செஞ்சி அருகே பரிதாபம்
கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: செஞ்சி அருகே பரிதாபம்
கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: செஞ்சி அருகே பரிதாபம்
ADDED : ஆக 04, 2024 04:16 AM

செஞ்சி: செஞ்சி அருகே கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அனந்தபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ராகவன்,7; அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் ஜெய்சரண்,10; தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
இருவரும் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் புலிவந்தி சாலையில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர்.
வழக்கமாக கிணற்றுக்கு மேலே உள்ள தொட்டியில் குளிப்பவர்கள், நேற்று தொட் டியில் தண்ணீர் இல்லாததால் கிணற்றில் இறங்கி படிக்கட்டில் அமர்ந்து குளித்தனர். அப்போது இருவரும் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தேடியபோது இருவரும் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த அன்னியூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ராகவன், ஜெய்சரண் ஆகியோரது உடல்களை மீட்டனர்.
இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.