ADDED : செப் 01, 2024 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் மின்னல், இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில், திண்டிவனம் அடுத்த கீழ் ஆதனுார் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் 2 பசு மாடுகள் நிலத்தில் மேய்ச்சலுக்கு சென்றன.
அப்போது நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மாடுகள் மிதித்ததால் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி இறந்தது. ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.