/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட 2 பேர் கைது
/
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட 2 பேர் கைது
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட 2 பேர் கைது
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட 2 பேர் கைது
ADDED : ஆக 06, 2024 07:24 AM

மயிலம் : பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியம், சிங்கனுார் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய, வி.ஏ.ஓ., தனவேலை அணுகினார். அதற்கு அவர் ரூ.5,000 லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து விவசாயி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.5,000 பணத்தை, விவசாயி நேற்று மதியம் கிராம உதவியாளர் ஏழுமலை, மூலம் வி.ஏ.ஓ.,விடம் கொடுத்தார். பணத்தை வாங்கிய இருவரையும், அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.